உடைமை - விடுதலை

 

பட்டாம்பூச்சி பறந்துகொண்டிருந்ததால்தான் அதை உங்களுக்கு பிடித்தது. கூட்டுப்புழுவாக இருந்தபோது இல்லை. 


உங்களுக்கு பட்டாம்பூச்சியைப்பிடிக்கும் என்பதற்குள் இருக்கும் பொருள், அதன் விடுதலை, அதன் வண்ணங்கள், அதன் தோற்றம் என எல்லாம் சேர்ந்துதானே தவிர வேறென்ன..?


அதை கையில் பிடித்துவைத்து ரசிக்க வேண்டும் என்று நினைத்தால், அதன் விடுதலை இல்லாமல் போகிறது. அதன் அழகில் சிறகை பறித்தோ அல்லது அதன் வண்ணங்களை வழித்தோ எடுத்துக்கொண்டால் அதன் தோற்றம் வீணாய் போகிறது.


ஒரு மனிதரின் மீது நான் அன்பு செய்கிறேன் என்கிற பெயரில், அவரை உடைமைப்பொருளாக கருதும்போது ஏற்படும் விளைவு இப்படித்தான் இருக்கும். முழுமை முற்றும் தொலைந்து, ஏதோவொரு குறைபட்ட நிலையே அங்கு நிற்கும்.


நான் உனது குரு, நாங்கள் உனது பெற்றோர்கள், நான் உன் காதலர், நான் உன் இணை என எது ஒன்றை முன்னிருத்தி உரிமை கோரினாலும் அங்கு அந்த பட்டாம்பூச்சிக்கு நடந்ததேதான் நடக்கும். ஆனால், பாசம், அக்கறை போன்ற திரைகளால் இது மறைக்கப்படும்.


அக்கறை என்பதே ஒருவகை மென்மையான அதிகாரப்போக்குதான்.


மனிதர்கள் ஒரு பறவையைப்போன்ற விடுதலையை வேண்டவில்லை. வீட்டுக்குள் சுற்றிவரும் ஒரு நாயைப்போன்ற விடுதலையைத்தான் வேண்டுகிறார்கள்.


- பரிதி


❤️

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை? - பரிதி

யட்சி - யட்சன்

கவிதை - அன்பு என்பது... - பரிதி