ஓர்மை - பரிதி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்

குழந்தை என்பது
தாயின் பிண்டத்துண்டு
 
ஆதிப்பெண்ணின்
இரத்தவாடைக்கே
அன்பென்று பெயரிட்டோம்
 
அதை
வாழும் பிற உயிரில்
காணும்போது
மூதாதை எனக்கொண்டோம்
 
சதையின் புடைப்பைத்தாண்டி
ஆண் பெண் என்பதெல்லாம்
தன்மை மாறுபாடேயன்றி
வேறில்லை..!
 
விதையின்
வேர்பிடிப்பைத்தாண்டி
பறந்தாலும், நடந்தாலும்
ஊர்ந்தாலும் பேதமில்லை
 
தன்மையே நமது பேதம்,
ஓர்மையே இறையின் வேதம்..!
 
- பரிதி
 
❤️
 
நன்றி படம் : இணையம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யட்சி - யட்சன்

பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை? - பரிதி

தமிழ்த்திருமணம் - மின்னூல் & முழு ஒலித்தொகுப்பு