இலையுதிர்காலம் - பரிதி

கிளை விட்டதிலிருந்தே
வாடிக்கைதான்
எங்கிருந்தோ
வந்தமர்வதும்
எங்கேயோ
பறந்து போவதும்
பேசிக்கொண்டதில்லை
பேச்சின்
அவசியங்களும் இல்லை
கீச்சிசை போதுமெனக்கு
கூடுகட்டத்தொடங்கியது,
ஏதோவொரு மகிழ்ச்சி...
குஞ்சு பொறிகக்கத்தொடங்கியது,
உள்ளூர ஆனந்தம்...
கிளை உதைத்துப்பறக்கும்போது,
வேரின் நுனியில் கசியும்
இன்பமெடுத்து
மண் வரைந்த ஓவியத்தை
ஏதோவொரு செடியில்
நீங்களும்
பூவாகப்பார்த்திருப்பீர்கள்...
காடளந்த சிறகை
காணமுடிவதில்லை
வெற்றுக்கூடுகள் கீச்சிடுவதில்லை
போகட்டும்,
என் இலையுதிர் காலத்திற்கு
காரணம் கேட்டது யார்..?
- பரிதி
கருத்துகள்
கருத்துரையிடுக