முழுமை - பரிதி

படம் இதைக் கொண்டிருக்கலாம்: இரவு, வானம், மரம், வெளிப்புறம் மற்றும் இயற்கை

முழுமை - பரிதி

எங்கிருந்தோ எனக்கு
கட்டளைகள் வருகின்றன...
காற்று,
அதன் ஊடகமாக இருக்கலாம்...
காட்சிகள்,
அதன் வழியாக இருக்கலாம்...
 
சில நேரங்களில்
நான் மௌனப்படுகிறேன்,
எனக்கான ஒரு சொல்லை
உங்கள் குரல்வளை ஒலிக்கிறது...
காற்று,
அதன் ஊடகமாக இருக்கலாம்...
காட்சிகள்,
அதன் வழியாக இருக்கலாம்...
 
உங்கள் மொத்த வாழ்விலிருந்தும்
நான் நீங்கியபிறகு,
உங்கள் நினைவுகளில்
எப்போதாவது எப்படியாவது
நான் எழுவேன்...
காற்று,
அதன் ஊடகமாக இருக்கலாம்...
காட்சிகள்,
அதன் வழியாக இருக்கலாம்...
 
ஊமை என்கிறீர்கள்
மொழி புரியாத நீங்கள்...
வானம் தன் இன்மையால்
பேசிக்கொண்டுதான் இருக்கிறது...
காற்று,
அதன் ஊடகமாக இருக்கலாம்...
காட்சிகள்,
அதன் வழியாக இருக்கலாம்...
 
பூமிக்கு ஒரு அணு உயரத்தில்
வானம் இருக்கிறது,
உண்மையில் உலகவாழ்வு
மரணத்தால் நீள்கிறது...
காற்றை உணர்ந்தவருக்கும்,
காட்சியை அறிந்தவருக்கும்
உலகம் முழுமையடைகிறது..!
 
- பரிதி
 
❤️

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யட்சி - யட்சன்

பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை? - பரிதி

தமிழ்த்திருமணம் - மின்னூல் & முழு ஒலித்தொகுப்பு