" உளவியல் - 2 " - பரிதி
" உளவியல் - 2 " - பரிதி
Johari Window Technique இது ஒரு மிகச்சிறந்த உளவியல் கூறு. Johari என்பவரால் கூறப்பட்டது. படத்தை பார்த்துக்கொள்ளுங்கள். நான்கு சாளரங்கள்(windows) உள்ளது.
1) Open window
2) Hidden window
3) Blind window
4) Dark window
Open window
நம்மைப்பற்றி நமக்கும் தெரிந்த, மற்றவர்களுக்கும் தெரிந்த விடயங்கள். உதாரணமாக, நமது உயரம், நிறம், நாம் பேசும் மொழி போன்றவை.
Hidden window
நம்மைப்பற்றி நமக்கு தெரிந்த, ஆனால் மற்றவர்களிடம் நாம் மறைக்கும் விடயங்கள். கூச்சம் காரணமாகவோ, அச்சம் காரணமாகவோ இருக்கலாம். உதாரணமாக, நாம் நன்றாக வரையலாம் ஆனால் வரைந்து பெட்டியில் பூட்டிக்கொள்வோம். பாடுபவராக இருக்கலாம் தனியாக இருககும்போது மட்டும் பாடிக்கொள்வோம். இன்னும் சொல்வதானால் நம் அந்தரங்கங்கள்(not only sex) எல்லாம் இதில் அடங்கும்.
Blind window
நம்மைப்பற்றி நமக்கு தெரியாத, ஆனால் மற்றவர்களுக்கு தெரிந்த விடயங்கள். உதாரணமாக, பொதுவெளியில் நாம் இருக்கும்போது சுற்றியுள்ளவர்களில் யாராவது இப்படிச்சொல்லலாம்... "இப்போ பாரேன் இந்த விசயத்துக்கு இவர் பயங்கரமா கோவப்படுவார்" என்று.
Dark window
நம்மைப்பற்றி நமக்கும் தெரியாத, மற்றவர்களுக்கும் தெரியாத விடயங்கள்.இவைதான் முந்தைய கட்டுரையில் குறிப்பிட்டிருந்த மனதின் Unconscious state ல் இருப்பது. ஒரு மிகச்சரியான சூழலில் நம்மை இயக்குவது.
உதாரணமாக, மனிதர்கள் சராசரியாக 5km வேகத்தில் ஓடுவோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், ஒரு அசாதாரணமான சூழல் வருகிறது. உங்களை ஒரு நாய் துரத்துகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்(பேச்சுக்குதான் பயப்படாதிங்க
) அப்போதும் அதே 5km வேகத்தில் தான் ஓடுவீர்களா என்ன? 10km வேகமாக மாறாது? எப்படி?

Unconscious state ல் இருக்கும் ஓர் உணர்வு உங்கள் உடலை கையாளுகிறது. அப்போது நீங்கள் நீங்களாக இருக்கமாட்டீர்கள். உங்களின் மொத்த உடலும் மனதின் Unconscious stateன் கட்டுப்பாட்டிற்க்குள் சென்றுவிடும்.
நமது திறமைகள், நமது அசாத்தியமான செயல்கள் எல்லாம் இங்கிருந்தே நிகழ்த்தப்படுகிறது என்பதை மறக்கவேண்டாம்.
உலகின் அத்தனை ஞானிகளும் "தன்னை அறிவதே அறிவு" என்று கூறினார்கள் இல்லையா? திருமூலர் சொன்னாரே... "தன்னை அறிந்திட தனக்கொரு கேடில்லை"என்று இதற்கும் Unconscious stateக்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என்ன?
நிச்சயம் உண்டு. ஆழ்மனதை அறிவதும். அங்கு உள்ள எண்ணங்களை தூய்மைப்படுத்துவதாலோ அல்லது நீக்குவதாலோ தன்னை ஒருவன் சீர்செய்துகொள்ளமுடியும் என்பதாலேயே அது பேசுபொருளாகிறது. தியானம் என்ற முறை, பலவடிவங்களில் இதற்காக பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஆழ்மனதைப்பற்றிய தேடலில் தான் Sigmund Freud தனது கனவுகள் பற்றிய கருத்துகளையும் முன்வைக்கிறார். கனவுகள் என்பதே ஆழ்மனதின் வெளிப்பாடே என்கிறார். நிஜ உலகில் உங்களால் செய்யமுடியாமல் போவதை மனதுக்கு செய்துகாட்டி ஒரு சமாதானத்தை செய்யும் வழிமுறைதான் கனவு என்கிறார். ஆனால், கனவுகள் பற்றிய பல ஆராய்ச்சிகளோடும் சந்தேகங்களோடும் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
என்னளவில் தியானம் என்பதை முதலில் ஆழ்மனதின் கட்டமைப்பாகவே பார்க்கிறேன். அதற்கு பிறகு தான் செயலை நோக்கிய பயணமாக கருதுகிறேன். ஓகம்(yoga) என்பது உடல் என்ற பொருளில் இருந்து உங்கள் மனதை விடுவிக்க செய்யப்படும் உத்தியாகவே நான் பார்க்கிறேன். உடலை இளக்கி உங்கள் மனதுக்கு ஆழ்மனதைப்பார்க்க எளிமைப்படுத்துவதே ஓகத்தின் பணி. இன்று மெதுவாக தியானம்போல செய்ய வேண்டிய ஓகத்தை இப்போது அரைமணிநேரத்தில் நூறுவகையான ஆசனங்கள் என்று இன்று ஓகம் என்ற மாபெரும் கலை வித்தையாக்கப்பட்டிருப்பதெல்லாம் காலக்கொடுமை.
வேறு எந்த வகையில் ஆழ்மனப்பயணம் சாத்தியப்படும்? மேலுள்ள இரண்டு மன அடுக்குகள் தெளிவோ அல்லது பூரணத்தை உணர்ந்தாலோ மட்டுமே ஆழ்மனதின் பயணம் எளிதாகும். உங்கள் வாழ்வின் தேவைகள் தீர்க்கப்படவேண்டும். அதற்கு வாழ்வின் தேவைகளை முதலில் நாம் அறியவேண்டும். இது தெரியாதா? உணவு, உடை, உறைவிடம் இதுதானே என்கிறீர்களா?
நானும் மறுக்கப்போவதில்லை. ஆனால் அதில் இன்னும் கொஞ்சம் ஆழமாக பார்த்து புரிந்துகொள்ள Maslow's hierarchy of needs என்ற theory உதவும் என்று நினைக்கிறேன்.
தொடர்ச்சி அடுத்த பதிவில்...
கருத்துகள்
கருத்துரையிடுக