"நம்மாழ்வார்" - பரிதி வருங்கால உழவன் (கவிதை)
"நம்மாழ்வார்" - பரிதி வருங்கால உழவன்
தன்னை உதிர்த்து
மண்ணை உயிர்த்தவன்!
ஒவ்வோர் உயிர்க்குள்
தன்னைக் கரைத்தவன்!
உழவன் யார்க்கும்
உறவாய்த் தெரிபவன்!
மண்ணைக் காக்கவே
மற்போர் கண்டவன்!
மந்தையைக் காட்டி
சிந்தையைத் தெளிவித்தான்!
தந்தையைப்போல
தாய்மண் அதைக் காத்தான்!
மரபின் வழியை
யார் மறித்தாலும்...
இவன் விழி
அவனை எரிக்கும்!
இயற்கையை மாற்றும்
சொல்லெழுந்தாலே...
பதில் மொழி
அனலாய்த் தெறிக்கும்!
பாலைக்கொடுத்து
உயிரை வளர்க்கும்
நம்வீட்டின் பசு!
இவன்,
பயிர் வளர்க்கவே
உயிரை இழந்த
இம்மண்ணின் சிசு!
அன்று
நீயும் நானும் அறியாதவன்...
இன்று
உனக்கும் எனக்கும்
முதலிறைவன்!
இதுவரை
நான் அவரைக் கண்டதில்லை!
அதனால்,
அவர் இல்லையென்றாலும்
எனக்கு கவலையில்லை!
என்னளவில்...
அவர் எழுத்தே உரு!
உன் சிந்தையே கரு!
அவரை இயற்கை வேளாண் விஞ்ஞானி எனச்சொல்வது அவரது பேரறிவை சுருக்கும் செயல். ஆகச்சிறந்த அறியாமை. இதை இறைவி சிந்தனைக்களம் கடுமையாக எதிர்க்கிறது. ஒட்டுமொத்த வாழ்வியலையும் பேசிய பேரறிஞன். தனது பேச்செங்கும், வாழ்வெங்கும் தத்துவங்களை இறைத்து வாழ்ந்த தமிழ் இறை. அவன் ஒரு இயற்கை வழி வாழ்வியல் விஞ்ஞானி..!
பேரன்புகள்!
- இறைவி சிந்தனைக்களம்
காணொலி வடிவில் பார்க்க இங்கே அழுத்தவும்...

கருத்துகள்
கருத்துரையிடுக