நம்மாழ்வார் போற்றி..! (பாடல்)
நம்மாழ்வார் போற்றி..!
பாடல் : தற்சார்பு
மெட்டு, வரிகள், குரல் : பரிதி
தோட்டம் செடிகளின் கூட்டம்
அதில் நமை நாளும் கரைத்திடுவோம்
பாடும் பறவைகளோடும்
உணவினை நாமும் பகிர்ந்திடுவோம்
செம்பருத்தி பூவோடு
துளசி இலை சேர்த்து
வண்ண சர்க்கரையும் போட்டு - நல்
வெந்நீரின் சூட்டோடு
கொதித்து விளையாடும் - அந்த
குமிழிகளின் ஆட்டம்
கோப்பையில் அதை ஊற்றி
இதழில் சிறுசூடுணர்ந்து
நினைவில் சில யுகம் கடந்து
கண்மூடி காணும் அந்த
கனவில் ஆனந்தம் இந்த
உடலில் ஒரு தெம்பும்...
ஆகாத குடமெடுத்து
மண் நிரப்பி விதைபோட்டு
தக்காளி பச்சை மிளகாய்
கத்தரி கறிவேப்பிலை
வெத்தல அவரக்கொடிக்கு
சொவரக்கொடுக்கலாம்
பாவக்கா பந்தலுக்கும்
பீர்க்கங்காய் புடலைக்கும்
ஒரு ஓரம் வீட்டில்
இடமும் ஒதுக்கலாம்
மருதாணி இலையா
சுண்டச்செடியா
நம்ம வாசலில் நிறுத்தனும்
கத்தாழ சோத்துக்கும்
சிறுகீரைக்கும்
ஒருதொட்டியக்கொடுக்கனும்
ஊரே அடங்கும்போதும்
உனக்காய் வளரும் உசுர
வீட்ட சுத்தி வளர்க்கனும்...
சாமி
வீட்ட சுத்தி வளர்க்கனும்...
- இறைவி சிந்தனைக்களம்
பாடலைக்கேட்க இங்கே அழுத்தவும்...
பாடல் : தற்சார்பு
மெட்டு, வரிகள், குரல் : பரிதி
தோட்டம் செடிகளின் கூட்டம்
அதில் நமை நாளும் கரைத்திடுவோம்
பாடும் பறவைகளோடும்
உணவினை நாமும் பகிர்ந்திடுவோம்
செம்பருத்தி பூவோடு
துளசி இலை சேர்த்து
வண்ண சர்க்கரையும் போட்டு - நல்
வெந்நீரின் சூட்டோடு
கொதித்து விளையாடும் - அந்த
குமிழிகளின் ஆட்டம்
கோப்பையில் அதை ஊற்றி
இதழில் சிறுசூடுணர்ந்து
நினைவில் சில யுகம் கடந்து
கண்மூடி காணும் அந்த
கனவில் ஆனந்தம் இந்த
உடலில் ஒரு தெம்பும்...
ஆகாத குடமெடுத்து
மண் நிரப்பி விதைபோட்டு
தக்காளி பச்சை மிளகாய்
கத்தரி கறிவேப்பிலை
வெத்தல அவரக்கொடிக்கு
சொவரக்கொடுக்கலாம்
பாவக்கா பந்தலுக்கும்
பீர்க்கங்காய் புடலைக்கும்
ஒரு ஓரம் வீட்டில்
இடமும் ஒதுக்கலாம்
மருதாணி இலையா
சுண்டச்செடியா
நம்ம வாசலில் நிறுத்தனும்
கத்தாழ சோத்துக்கும்
சிறுகீரைக்கும்
ஒருதொட்டியக்கொடுக்கனும்
ஊரே அடங்கும்போதும்
உனக்காய் வளரும் உசுர
வீட்ட சுத்தி வளர்க்கனும்...
சாமி
வீட்ட சுத்தி வளர்க்கனும்...
- இறைவி சிந்தனைக்களம்
பாடலைக்கேட்க இங்கே அழுத்தவும்...
கருத்துகள்
கருத்துரையிடுக