தற்சார்பு – 7 – பரிதி
தற்சார்பு – 7 – பரிதி
படிக்க ஆகும் நேரம் – 6.40 நிமிடங்கள்
"Meme Creators எனும் மடையர்களும், சுய அறிவும்…"
Meme Creatorகளால வீட்ல சும்மா இருக்க முடியலன்னா ஒவ்வொரு முறை சாப்பிட்டதும் தூக்கமாத்திரை போட்டுட்டு தூங்கிடுங்க. கை பரபரன்னு இருந்தா பூசாத தரையில வச்சு தேச்சுக்கங்க. அதைய விட்டுட்டு உங்களுக்கு தெரிஞ்ச அரைகுறை விசயத்த வடிவேலுவ வச்சு ரெண்டு வரியில எழுதி ஒரு படத்த உருவாக்கி Likeக்குக்கும் commentக்குக்கும் shareக்குக்கும் அலஞ்சு இணையத்துல விட்டுட்டு மொகத்துல பெரும பேயாட உக்காந்திட்டு இருக்கூடாது.
உங்க மனசுக்குள்ள எவனோ வந்து நீங்க சமூக்கடமை செய்யுறதா பதிய வச்சுட்டானுங்க. அதுல இருந்து மொதல்ல வெளிய வாங்க.
நீங்க எழுதுற ரெண்டுவரி பதிவுக்குள்ள இருக்குற பொய்ய தெளிய வைக்க இங்க உக்காந்து ரெண்டு பக்கத்துக்கு கட்டுரை எழுதவேண்டிகெடக்கு. ரெண்டுவரிய முழுசா படிச்சு அந்த பொய்ய முழுசா எடுத்துகிட்டவங்களுக்கு இந்த ரெண்டு பக்க கட்டுரைய படிக்க நேரமும் இருக்குறதில்ல, விருப்பமும் இருக்குறதில்ல.
அவுங்கள படிக்கவைக்க என்னெல்லாம் செய்யவேண்டி இருக்கு தெரியுமா…
· உண்மைய சுருக்கமா சொல்லனும்.
· படிக்க ஆகும் நேரம் எவ்வளவுன்னு கட்டுரைய தொடங்கறதுக்கு முன்னாடியே சொல்லி அவுங்கள படிக்க வைக்கனும்.
· அதிகமான புள்ளிவிவரங்களக்காட்டி அவுங்ககிட்ட பேசுனா எங்க scroll பண்ணிருவாங்களோன்னு பயந்துகிட்டுவேற எழுதனும்.
· எந்த நேரம் மக்கள் ஓய்வா இருப்பாங்க காலையா, அல்லது மதியம் சாப்பிட்டா, அல்லது மாலையா, அல்லது இரவு தூங்கும்முன்பான்னு பாத்து வெளியிடனும்.
· சரி, Audioவாவோ இல்ல Videoவாவோ போடலம்னா Download பண்ணுவாங்களோ பண்ணமாட்டாங்களோன்னு யோசிக்கனும்.
· கொறஞ்ச MBல உருவாக்க Data Compressionக்கு என்ன Tool இருக்குன்னு உக்க்காந்து தேடி அதப்படிக்கனும். இருக்குற பிரச்சனைல இது ஒரு பிரச்சனை.
தனிமனித செயல்பாட்டை இங்கு யாரும் கேள்விக்கு உட்படுத்தப்போவதுமில்லை, உட்படுத்தவும் முடியாது. ஆனால், அதே செயலை நீங்கள் சமூகத்தில் நின்று செய்யும்போது, அந்த செயல் ஏற்படுத்தும் விளைவை முதலில் கருத்தில் நிறுத்தி செய்யவேண்டும்.
தொடக்கத்தில் இந்த Meme எனும் முறையை நானும் பரப்புரையின் ஒரு வடிவமாக, கதை, கவிதை, பாடல், கட்டுரை, திரைப்படம் எனும் கலைவடிவங்களில் ஒன்றாகவே பார்த்தேன். ஆனால், இதன் திசை மிக கோரமான எல்லையை நோக்கி இருப்பதை சல்லிக்கட்டு, Sterlite போன்ற மொத்த சமூகத்தையும் பாதிக்கும் போராட்டங்களில் உணர்ந்தேன்.
Memeகளின் வீரியத்தை முதலில் உணருங்கள்.
· பொய்யைப்பரப்ப ஒவ்வொரு கட்சியும் காசு கொடுத்து Meme Creatorகளை வைத்துள்ளதை வைத்து உணருங்கள்.
· ஜூலி போன்ற பதர்களை புரட்சிப்பெண்ணாக அடையாளம் காட்டமுடியும் என்று உணருங்கள்.
· தற்போது இருக்கும் இந்த அசாதாரண சூழல் Corporate நிறுவனங்களுக்கு பெரும் வரப்பிரசாதம். தன்னுடைய செலவீனங்களை எப்படியெல்லாம் குறைக்க முடியும் என்பதை சோதித்துப்பார்க்க அவர்களுக்கு கிடைத்திருக்கும் பொற்காலம். இரண்டு நாளுக்கு முந்தைய உச்ச நீதிமன்றம் மற்றும் அரசின் செய்திகளை எடுத்துப்பாருங்கள். அந்த செய்தியின் சாரம் இதுதான்… இந்த சூழலைப்பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள் ஊதியக்குறைப்பை செய்யக்கூடாது. ஆட்குறைப்பு நடவடிக்கைகளை செய்யக்கூடாது என்றதற்கு தனியார் நிறுவனங்கள் சொன்ன பதில், அரசு ஊழியர்கள் சம்பளத்தில் 30% பிடித்தம் செய்யப்படும் என்பதுபோலவேதான், பணப்புழக்கம் இல்லாத இந்த அசாதாரண சூழலில் எங்களாலும் முழு சம்பளத்தை கொடுக்கமுடியாது என்கிறது. என்னவோ நல்ல இலாபம் வந்தபோது அள்ளிக்கொடுத்ததுபோல பேசுகிறர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இன்னொரு விஷயத்தை யோசித்துப்பாருங்கள் Work From Home என்ற முறை ஒன்றை கையிலெடுத்து இருக்கிறார்கள். இதில் அவர்களுக்கு நம்மையெல்லாம் வைத்து வேலைவாங்க ஒரு பெரிய கட்டிடம் தேவையில்லை. அதிலாகும் மின்சாரம், தேநீர், உணவு செலவு இல்லை. இது எல்லாம் Corporate நிறுவனங்களுக்கு இலாபக்கணக்கு. இதை நிரந்தரமாக்கினால் என்ன என்ற எண்ணத்திற்கு அவர்கள் வந்திருக்கிறார்கள். இதை மறைமுகமாக வைத்தே அரசும் நீதிமன்றமும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை செய்யக்கூடாது என்று Corporate நிறுவனங்களுக்கு சொன்னது. ஆனால் இந்த Meme Creatorகள் தங்களை அறியாமலேயே இந்த Work From Home என்ற விஷயத்தை மிக நகைச்சுவையாக பேசிப்பேசி மக்களை அதற்கு பழக்கப்படுத்துகிறார்கள். மக்களுக்கும் அது வீட்டிலிருந்தபடியே வேலை என்பதும் ஜாலியாகத்தானே இருக்கும் என்று மகிழ்ச்சியோடு ஏற்கும் மனநிலைக்கு வருகிறார்கள். ஒன்றை யோசித்துப்பாருங்கள், ஒரு தேநீர் கோப்பையை தொடர்ந்து கையில் தூக்கிப்பிடித்திருந்தால் கை வலிக்கும்.
நீங்கள் கேட்கலாம் Memeகள் நல்ல Stress Relifஆக இருக்கும்போது அதை ஒரு சிலருக்காக ஏன் எதிர்க்கவேண்டும் என்று. அவர்கள் ஒரு கோப்பைப்பாலில் கலந்திருக்கும் நஞ்சு. Technology and Educational Memeகளைப்பற்றி இங்கு யாரும் குறை சொல்லவில்லை. ஆனால், அதை நீங்கள் பகிர்வதுமில்லை, பார்ப்பதுமில்லை.
ஐயா ஔவை நடராசன் அவர்களின் கதை ஒன்றை ஐயா நம்மாழ்வார் அவர்கள் அடிக்கடி சொல்லுவார்…
ஒரு ஊரில் உண்மை, பொய் இரண்டும் பக்கத்து பக்கத்து வீட்டில் குடியிருந்ததாம். ஒருநாள் காலை பொய், உண்மையின் வீட்டுக்கதவை தட்டி “ஆற்றில் குளிக்கப்போகலாம் வா” என்றதாம். உண்மையோ முதலில், தான் இப்போதுதான் குளித்துவிட்டு பூஜை செய்துகொண்டிருப்பதாக சொல்லியதாம். பின்பு யோசித்துப்பார்த்துவிட்டு பொய்யே தன்னை ஒருமுறை சுத்தம் செய்துகொள்வதாக நினைக்கும்போது, நாமோ உண்மை, மறுமுறை நம்மை சுத்தம் செய்துகொண்டால் என்ன என்று யோசித்ததாம். பின் “சரி வா போகலாம்”என்றதும் இருவரும் ஆற்றங்கரைக்குப்போய் மூழ்கி குளித்தார்களாம். இரண்டு முங்குவரை பக்கத்திலிருந்த பொய் மூன்றாம் முங்கிற்கு காணவில்லை. தேடிப்பார்த்த உண்மை சரி நாம் போகலாம் என்று பார்த்தபோது, கரையில் வைத்திருந்த தனது உடை அங்கு இல்லாதது தெரிந்தது. பொய் தனது உடையை அணிந்துகொண்டு ஊருக்குள் போய்விட்டதைஉண்மை உண்ர்ந்தது. கொஞ்சம் யோசித்த உண்மை பொய்யின் உடையை அணிவது இழுக்கு என்று நினைத்து அம்மணமாகவே ஊருக்குள் சென்றதாம். மக்கள் அனைவரும் “என்ன இப்போதான் உண்மை போனது. மறுபடி யோரோ உண்மைமாதிரி அதொட பேரக்கெடுக்க அம்மணமா வர்றதா தெரியுது”ன்னு சொல்லி கல்லெடுத்து அடிச்சாங்களாம். உண்மை அழுதுகிட்டே கிட்ட வந்தப்புறம்தான் தெரிஞ்சதாம் இதுதான் உண்மையான உண்மை, மொதல்ல போனது உண்மையீட உடையில இருந்த பொய்யின்னு.
இந்த கதைய சொல்லிட்டு ஐயா நம்மாழ்வார் சொல்றாரு “மொதல்ல உண்மையோட உடுப்புல பொய் ஊர ஒரு வலம் வந்துடும். மக்களுக்கு தெரியாது. உங்கள அடிப்பாங்க. திரும்பத்திரும்ப நீங்க அவுங்க முன்னாடி போய் உண்மைய காட்டுங்க. அவுங்க ஏத்துப்பாங்க”ன்னு.
“மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்றான் வள்ளுவன். இப்போது
“மெய்ப்பொருள் காண்பது அறிது” என்றானதை என்ன சொல்ல? தற்சார்பின் அதிதுவக்கம் சுயசிந்தனை. உலகில் 750கோடி பேர் இருக்கிறோம் என்றால் 750கோடி வகையான சிந்தனை இருக்கவேண்டும். இருக்கும். “Roshomon விளைவு” என்ற உளவியல் கூற்றை தேடிப்படியுங்கள். சீன வழக்கை ஆங்கிலத்தில் இப்படி சொல்லுவார்கள் “Same bed, different dreams” என்று.
தற்சார்பு என்பது வெறும் உணவோடு மட்டும் தொடர்புடையது இல்லை. தற்சார்பின் துவக்கம் சுய அறிவைப்பயன்படுத்துவது. சுய அறிவின்வழி மண்சார்ந்த அறிவைப்பெறுவது. மண்சார் அறிவை வைத்து உலகத்தைப் பார்ப்பது என்பதே. Meme Creatorகளை சுய அறிவின்வழி புறக்கணியுங்கள்.
பேரன்புகள்..!
- இறைவி சிந்தனைக்களம்

கருத்துகள்
கருத்துரையிடுக