தற்சார்பு – 6 – பரிதி
தற்சார்பு – 6 – பரிதி
படிக்க ஆகும் நேரம் – 3.30 நிமிடங்கள்
“வாழ்வு என்றால் என்ன?”
“தகவல்கள் அறிவு ஆகாது(Informathion is not knowledge)” என்பார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். உங்களைச்சுற்றி பலவகைகளில், பலவழிகளில் பல தகவல்கள் இருக்கிறது. உங்களுக்குள் கொடுக்கவும்படுகிறது. அது எதுவும் அறிவாகாது.
சரி, எப்போது ஒரு தகவல் அறிவாகிறது? ஒரு தகவல் உங்களின் உணர்வோடு எப்போது சேர்கிறதோ அப்போது அது அறிவாகிறது. ஐன்ஸ்டீன் சொன்னது, இப்போது உங்களுக்கு வெறும் தகவல். எப்போது இதை நீங்கள் உணர்கிறீர்களோ அப்போது உங்களுக்குள் அது அறிவாகிறது.
அதனால்தான் இறைவி சிந்தனைக்களம் தற்சார்பு எனபதை உங்களுக்கு வெறும் தகவலாக கொடுக்காமல், அறிவாக கொடுக்க முயற்சி செய்கிறது.
திரும்பத்திரும்ப சொல்கிறேன், தற்சார்பு என்பது ஒரு எளிய தத்துவம். இயற்கை என்ற இந்த அமைப்பை நீங்கள் புரிந்துகொள்ளும்போது அது உங்களுக்கு புலப்படும். “வாழ்வு என்றால் என்ன?” என்ற கேள்விக்கு ஐயா நம்மாழ்வார் அவர்கள் அளித்த பதிலைக்கொஞ்சம் பாருங்கள்…
“மரணத்தை எப்படி தள்ளிபோடுகிறோம் என்கிற அறிவும், அதற்கான செயலும்தான் வாழ்வு” என்கிறார்.
கொஞ்சம் யோசித்துபாருங்கள், மூன்று அல்லது நான்கு நாட்களுக்குமேல் தண்ணீர் குடிக்காமல் மனிதனால் உயிர்வாழ முடியாது என்கிறது அறிவியல். அதேபோல் உணவு ஏதும் சாப்பிடாமல் மூன்று வாரங்களுக்குமேல் மனிதனால் உயிர்வாழ முடியாது என்கிறது அறிவியல். அறிவியலை விட்டுத்தள்ளுங்கள். அது ஒரு ஏமாற்றுவேலை, கண்கட்டு வித்தை. பன்னிரண்டு நாட்கள் துளிநீரும் அருந்தாமல் தான் கொண்ட கொள்கைக்காக வீரச்சாவை தழுவிய தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதி என் அண்ணன் தியாக தீபம் திலீபன் இருக்கிறான் சான்றுக்கு.
ஆக, மரணம் என்பது மிகநேரடியாக உணவோடு தொடர்புடையது. உடையோ, உறைவிடமோ இல்லாத காலத்திலும் மனிதர்கள் நாம் இந்த உலகத்தில் வாழ்ந்திருக்கிறோம். அப்படிப்பட்ட உணவுக்கு ஆபத்து, அப்படியான உணவில் நஞ்சு கலந்து வருகிறது எனும்போதுகூட மனிதன் விழிப்படையவில்லை என்றால் அறிவீனத்தின் உச்சகட்ட காலத்தில் நாம் இருக்கிறோம் என்பதை நான் எழுதவேண்டுமா?
Refined Oil, Refined Suger, Hybrid Vegetables, Hybrid Rice, Modern Rice Mills இத்தனை வழியாகவும் நஞ்சூட்டப்பட்டது வெறுமனே நமது உணவில் மட்டுமல்ல. இத்தனையையும் ஏற்றுக்கொண்டபோது நம்மிடமிருந்து பறிக்கப்பட்டது நமது வாழ்வு என்பது இன்னுமா புரியவில்லை?
ஒப்பிட்டுப்பாருங்கள், Organic பொருட்களின் விலை உச்சத்தில் இருக்கிறது. வேறுவழியே இல்லாமல் நாம் Hybrid பொருட்களை நோக்கி நகர்த்தப்படுகிறோம். இதன் பின்னால் உள்ள வியாபாரப்பின்னல்கள் இன்னும் உங்களுக்கு விளங்கவில்லையா?
தீர்வு என வெளியில் நீங்கள் எதைத்தேடினாலும் அது மற்றொரு சிக்கலுக்குள்ளேயே உங்களை நிறுத்தும். வேறு என்னதான் வழி? யாரையும் நம்பவேண்டிய சூழலில் நம்மை இயற்கை வைக்கவில்லை. இயற்கையின் இயல்பில் நின்று பாருங்கள் தாயின்வழி வந்தோம். தாய்க்காக நிற்கவேண்டிய கட்டாயத்தைக்கூட நமக்கு இயற்கை விதிக்கவில்லை (முதியோர் இல்லத்தைப்ப்பாருங்கள்). பிறந்தவுடன் தொப்புள்கொடி அறுத்து கொடுக்கப்படுவது சுதந்திரம் என்று அறிக. இயற்கையால் நாம் பிறக்கும்போதே நம் கையில் அளிக்கப்பட்ட சுதந்திரத்தை சோத்துக்காக அடகுவைக்கச்சொல்லி நம்மை விட்டுவிடுமா என்ன?
தற்சார்பு என்பது ஒரு எளிய தத்துவம். ஒவ்வொரு உயிருக்குள்ளும் வைத்து அனுப்பப்பட்டிருக்கும் பேரறிவு.
ஒரு கோழி கம்பீரமாக குப்பையைக்கிளறி தன் உணவை எடுத்துக்கொள்கிறது. ஒரு கோழிக்கு குப்பையில் சோறு வைத்திருக்கும் இயற்கை, உங்களுக்கும் எனக்கும் மட்டும் வேறொருவர் நிலத்திலா வைத்திருக்கப்போகிறது? நாம் காணாதபோது அது வியாபாரமாக்கப்படுகிறது. வீட்டிலிருக்கும் Crotonsகளிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அங்கு தக்காளிச்செடியையும் அவரைக்கொடியையும் பயிரிடுங்கள். தற்சார்பின் முதல்படி இதுதான்.
இந்த ஊரடங்கின் எல்லையில் உணவுப்பஞ்சம் வருமாயின் அணு ஆயுதக்கண்டுபிடிப்பும், செவ்வாய் கிரகத்தில் கால்பதிப்புமல்ல அறிவும், வாழ்வென்பதும் “மரணத்தை எப்படி தள்ளிபோடுகிறோம் என்கிற அறிவும், அதற்கான செயலும்தான் வாழ்வு” என்பதை இந்த உலகம் உணரும். நம்மாழ்வாரோடு பேசி அதற்கு முன்னரே நீங்கள் அதை உணர்ந்துகொள்ளுங்கள்.
பேரன்புகள்!
- இறைவி சிந்தனைக்களம்

கருத்துகள்
கருத்துரையிடுக