தற்சார்பு – 5 – பரிதி
தற்சார்பு – 5 – பரிதி
படிக்க ஆகும் நேரம் – 4.30 நிமிடங்கள்
“இயற்கையின் விதி?”
காலம், கி.மு.90 - 300களில்...
தாலமி கூறினார் “புவியே மையம். புவியைச்சுற்றிதான் மற்ற கோள்களும், சூரியனும் சுற்றிவருகிறது” என்று. இந்த கருத்தைத்தான் உலகின் பெரும்பான்மையினர் நம்பி வந்தனர். அதுமட்டுமல்லாது தாலமியின் கூறு மதக்கோட்பாடாகவும் இருந்துவந்தது. அதன்பின் வந்த அரிஸ்டாடில் பூமிக்கும் நிலவுக்கும் இடையில் புதன், வெள்ளி, சூரியன், செவ்வாய், வியாழன் போன்ற நிலையான கோள்கள் இருந்து புவியை மையமாகக்கொண்டு சுற்றுவதாக புவி மையக்கோட்பாட்டை வைத்தார்.
காலம், கி.பி.1300 - 1500களில்...
கோபர் நிகஸ் தனது சூரியமையக்கோட்பாட்டினை முன்வக்கிறார். மதமும் ஏற்கவில்லை, அவர் தனது நூலை இலத்தினில் எழுதியிருந்ததால் மக்களிடமும் போய்ச்சேரவில்லை. அவரின்பின் வந்த கலீலியோ கலிலி தனது தொலைநோக்கியால் அதை நிறுவ முயல்கிறார். ஆனால் மத அடிப்படைவாதிகள் ஏற்க மறுக்கின்றனர். இது எட்டாம் போப் அர்பனை தாக்குவது போல் தோன்றியதால், கலீலியோ கலிலி புலன் விசாரனைக்கு உள்ளாக்கப்பட்டு வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், இப்போது சூரியமையக்கோட்பாட்டினை உலகம் ஏற்றிருக்கிறது.
உலகம் ஏற்றுக்கொள்ளாதபோதும் சரி, உலகம் ஏற்றுக்கொண்டபோதும் சரி பேரியற்கையில் எந்த மாற்றமும் இல்லை. சூரியனே மையம்!
“இயற்கை ஒருபோதும் மாறுவதில்லை. இயற்கையின் மீதான மனிதனின் பார்வைதான் காலத்திற்கு காலம் மாறுகிறது” என்கிறார் இயற்கை வழி வாழ்வியல் விஞ்ஞானி ஐயா மசானபு ஃபுகோகா அவர்கள். இவர் ஒரு ஜப்பானியர். இவரைத்தான் ஐயா நம்மாழ்வார் அவர்கள் தனது குருபோல் உணர்வதாக குறிப்பிடுகிறார்.
சிந்தித்துப்பாருங்கள், இந்த ஊரடங்கில் பிறப்பு, இறப்பு, பசி என்ற எதற்கும் தடைபோட முடியவில்லை. ஆனால் வாழத்தடை போட்டுக்கொண்டோம். வாழ்வின் ஒரு பகுதியை முடக்கிக்கொண்டோம். இயற்கை அப்படியே தான் இருக்கிறது. நமது செயற்கைத்தனங்களை நமக்கு அடையாளம் காட்டியிருக்கிறது. உங்களின் அத்தனை கொண்டாட்டங்களையும் நானும் வரவேற்கிறேன். மகிழத்தானே உலகம். ஆனால், கொஞ்சம் இயற்கை நம்மோடு எதையோ பேசத்துடிக்கிறது என்பதையும் எண்ணுங்கள். இயற்கையை புரிந்துகொள்ளச்சொல்லி அது ஏதேதோ வகையில் உங்களை அனுகுகிறது என்பதையும் எண்ணுங்கள். இந்த கட்டுரை அப்படியான ஒன்றாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
சரி, பிறக்கும் எல்லோரும் இறக்கிறோம். அப்புறம் ஏன் இயற்கையை புரிந்துகொள்ளவேண்டும்? ஏனென்றால், இடையில் இருக்கும் இந்த வாழ்வை நம்மால் இன்பமாகவோ துன்பமாகவோ உணரமுடிகிறது. நல்ல நகைச்சுவைக்கு சிரிக்கிறோம், வலித்தால் அழுகிறோம். ஆக, நாம் என்பது உலகில் உள்ள பலகோடி பொருள்களில் இருக்கும் உயிர்ப்பொருள். இந்த உணர்வையெல்லாம் இயற்கையால் படைக்கப்பெற்ற சக உயிரோடு அனுபவிக்கிறோம். எனவே இதன் இயக்கத்தைப்பற்றி அறிவது அவசியம்.
ஒரு நிறுவனத்திற்கு புதிதாக நீங்கள் வேலைக்கு சேரப்போகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். எட்டு மணிநேரப்பணிதான், ஆனால் அந்த நிறுவனத்தில் காலை 6லிருந்து மதியம் 2மணிவரை மற்றும் மதியம் 2மணியிலிருந்து இரவு 10மணிவரையும் என இரண்டு பணிமுறைகள்(Shifts) இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். கிட்டத்தட்ட அந்த நிறுவனம் தொடங்கிய 10ஆண்டுகளாகவே இதுதான் நடைமுறை. ஆனால், நீங்களோ காலை எப்போதும் 9மணிவரை தூங்கக்கூடியவர். இப்போது மேலாளரிடம் சென்று நான் 9மணிக்குதான் உறக்கம் கலைப்பேன். அதனால் உங்களின் பணி நேரங்களை மாற்றிவைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்வீர்களா? சொல்லமுடியுமா? சொன்னால் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?
நீங்கள் அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேரும்முன்னும் அதுதான் அங்கு நடைமுறை. வேலை பிடிக்காமல் நீங்கள் ராஜினாமா செய்துவிட்டபின்னும் அதுதான் அங்கு நடைமுறை. உங்களுக்காக அவர்கள் எதையும் மாற்றிக்கொள்ளமாட்டார்கள். அப்படியானால் வேறுவழியே இல்லை அந்த நிறுவனத்தின் விதிமுறைகளை கடைபிடிப்பது ஒன்றுதான் அங்கு நீங்கள் பணிபுரிய வேண்டுமென்றால் இருக்கும் வழி.
நூறுபேர் வேலை செய்யும் ஒரு நிறுவனத்திற்கே இப்படியென்றால். பலகோடி உயிர்களை தாங்கிநிற்கும் இந்த உலகத்தின் விதியை அறிய வேண்டியதேவை எனக்கு இல்லை என்பது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்?
ஐயா நம்மாழ்வார் இந்த பேரியற்கையின் செயல்பாட்டை ஒரு கேள்வியின் மூலம் நமக்கு விளக்குகிறார். “நீங்க பொறக்குறதுக்கு முன்னாடியும் இந்த ஒலகம் இருந்துச்சு, நீங்கெல்லாம் செத்தாலும் இந்த ஒலகம் இருக்கும். அப்ப வந்துபோற நீங்க இந்த ஒலகத்தோட விதிய, அது எப்படி இயங்குதுங்குற இயக்கத்த தெரிஞ்சிக்க வேண்டாமா?” என்கிறார்.
Quarantine Games, New Recipes, Dare Challangeக்கு இடையில் இந்த பேரியற்கை, நம்மாழ்வார் என்ற கிழவனின் வழியா உங்ககிட்ட ஏதோ பேச முயற்சி செய்கிறது. கொஞ்சம் கேட்கப்பாருங்கள். வலையொளி(youtube)ல் அவரது காணொளிகளை பாருங்கள். அவரோடு பேசுங்கள். தற்சார்பு என்ன… இந்த உலகை அறிமுகப்படுத்துவான். அவன் இயற்கை வேளாண் விஞ்ஞானி அல்ல. அப்படிச்சொல்வது அவனது பேரறிவை சுருக்கும் செயல். அறியாமை. எப்பேர்பட்ட தத்துவத்தை ஒரு கேள்வியின் வழியே காண்பித்திருக்கிறான். அவன் ஒரு இயற்கை வழி வாழ்வியல் விஞ்ஞானி..!
பேரன்புகள்!
- இறைவி சிந்தனைக்களம்

கருத்துகள்
கருத்துரையிடுக