தற்சார்பு – 4 – பரிதி

தற்சார்பு – 4 – பரிதி

 படிக்க ஆகும் நேரம் – 4 நிமிடங்கள்

“விவசாயத்தில் நிறுவன நடைமுறை”

ஒரு தொலைக்காட்சிப்பெட்டி குறைந்தபட்சம் 15ஆண்டுகள் வேலைசெய்யும் என்று வைத்துக்கொள்ளுங்கள். 15ஆண்டுக்கு ஒரு குடும்பம் அந்த தொலைக்காட்சிப்பெட்டி தயாரித்த நிறுவனத்தோடு தொடர்பில் இருக்கப்போவது இல்லை. ஆனால், அந்த நிறுவனத்தின் தலைவர் ஒரு கோடீசுவரர்.

ஒரு ஆடையை, குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்கு நாம் பயன்படுத்துவோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த ஒரு ஆண்டுக்கு அந்த ஆடை தயாரித்த நிறுவனத்தோடு நாம் தொடர்பில் இருக்கப்போவது இல்லை. ஆனால், அந்த நிறுவனத்தின் தலைவர் ஒரு கோடீசுவரர்.

நம் ஒவ்வொருவருக்கும் உணவு வேண்டும். அதுவும் ஒரு நாளைக்கு மூன்று முறை வேண்டும். ஆனாலும், அதை உற்பத்தி செய்யும் விவசாயி மேல் சொன்ன முதலாளிகளை விட ஏழை. எளிய கேள்வி… ஏன்?

அவர்களிடமுள்ள நிறுவனமுறை இவர்களிடத்தில் இல்லை. Organizational Structureல் Line Organizational Structure என்று ஒன்று உண்டு. அதில் ஒரு CEO இருப்பார். அவரின்கீழ் ஒரு Manager இருப்பார். அவரின்கீழ் ஒரு Department Supervisor இருப்பார். அவரின்கீழ் ஒரு Department In charge இருப்பார். அவரின்கீழ் Workers இருப்பார்கள். விவசாயத்தில் அப்படியான எந்த நடைமுறையும் இல்லை. அதற்காக நான் விவசாயத்தை Corporate நிறுவனங்களைப்போல் ஆக்கச்சொல்லவில்லை. அது முடியவும் முடியாது. ஏனெனில், இது ஒரு வாழ்வியல் முறை. ஒரு நிறுவனம் இதை கையில் எடுக்காது. யோசித்துப்பாருங்கள், உலகெங்கும் Shell நிறுவனத்திற்கு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் இருக்கிறது. விவசாய நிலங்கள் இருக்கிறதா? இருக்காது. ஏன் குறிப்பாக Shell நிறுவனத்தை குறிப்பிடுகிறேன் என்றால், கச்சா எண்ணெய்(அது petrolலாகவோ dieselலாகவோ) தேவைப்படும் வாடிக்கையாளர்கள்(Customers நாம்தான்) உலகெங்கும் இருக்கிறார்கள். இவர்களை Loyal Customers என்பார்கள். அதாவது நம்பிக்கையான நிரந்தர வாடிக்கையாளர் கூட்டம். உணவுக்கும் அதே போலதான். ஆனாலும் Shell நிறுவனம் உணவு உற்பத்தியில் இல்லை. Reliance நிறுவனமும் அதேபோல்தான். ஆனால், Reliance நிறுவனம் விவசாயியால் உற்பத்தி செய்யப்பட்ட பொருளை மதிப்புக்கூட்டி(value added) விற்பனை செய்யும் சந்தையில் உள்ளது. அதனால்தான் குறிப்பிட்டேன் ஒரு Corporate நிறுவனம் இதை கையில் எடுக்காது என்று.

இப்போது உங்களுக்குள் எழும் கேள்வி எனக்கு புரிகிறது. தற்சார்புக்கும் இதற்கும் என்ன தொடர்பு?

ஒரு விவசாயிக்கு ஒரு Loyal Customer கூட்டம் தேவை. அதாவது நம்பிக்கையான நிரந்தர வாடிக்கையாளர் கூட்டம். அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு விவசாயி தனக்குத்தானே ஒரு Line Organizational Structureரை உருவாக்கிக்கொள்வான். எப்படி?

உதாரணமாக, 5கி.மீ சுற்றளவுள்ள இடத்தை நினைத்துக்கொள்ளுங்கள். அதில் 5ஏக்கர் மட்டுமே விவசாயம் செய்து கொண்டிருக்கும் நிலம் கொண்ட ஒரு விவசாயி இருக்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். அங்குள்ள மக்கள் தங்கள் வீடுகளிலேயே காய்கறிகளை வீட்டுத்தோட்ட முறையில் உற்பத்தி செய்துகொள்கிறார்கள் என்றால், அரிசி பருப்புக்கு மட்டுமே பெரிய நிலம் தேவைப்படும், ஒரு விவசாயி தேவைப்படுவார். அந்த தேவைக்கு, அந்த விவசாயியை, அந்த மக்கள் அனுகி அரிசி பருப்பை உற்பத்தி செய்யச்சொன்னால் அந்த விவசாயிக்கு ஒரு Loyal Customer கூட்டம் அதாவது நம்பிக்கையான நிரந்தர வாடிக்கையாளர் கூட்டம் கிடைத்துவிட்டார்கள்.

· இங்கே ஒரு விவசாயி தான் உற்பத்தி செய்த பொருளுக்கு தானே விலை வைக்கலாம்.

· பொருளை அதிகதூரம் கடத்தப்படத்தேவையில்லை என்பதால் கனரக வாகனம் என்ற ஒன்றே தேவைப்படாது.

· காற்று மாசுபாடுமில்லை.

· இந்தமுறை இந்த பயிரைப்போட்டு சரியான விலைக்கு போகாமல் நட்டமாகிவிடுவோமோ என்ற பயம் விவசாயிக்கு இல்லை.

· மேலும், இடைத்தரகர்கள் இல்லை.

எல்லோராலும் ஒரு தொலைக்காட்சிப்பெட்டி தயாரித்துக்கொள்ள முடியாததால் ஒரு நிறுவனத்தை நாடுகிறோம். இப்போதுள்ள சூழலில் எல்லோராலும் நிலம் வாங்கி விவசாயம் செய்யமுடியாது எனும்போது நிலமுள்ள ஒரு விவசாயியை நாடலாம். ஆனால் இதை அவ்வளவு எளிதாக நடக்கவிடமாட்டார்கள் இடைத்தரகர்கள். ஏனென்றால், இவர்களுக்கு பொருளின் தட்டுப்பாடு(Demand)க்கு ஏற்பவே அதன் இலாபம் அமையும் என்பதால். ஆனால், ஒரு விவசாயியும், பசிகொண்ட நாமும் நேரே இணையும்போது அங்கு Supply, Demand Equilibrium ஏற்படும்.

காய்கறிகளை வீட்டுத்தோட்டத்தில் உற்பத்தி செய்துகொண்டு, அரிசி, பருப்பின் தேவைகளுக்கு நேரடியாக ஒரு விவசாயியை அனுகி உனது பொருளை நான் வாங்கிக்கொள்ளுகிறேன் என்றளிக்கும் உத்திரவாதத்தில் தொடங்கிவிடும் தற்கால நடைமுறைக்கேற்ற தற்சார்பு.

பேரன்புகள்!

- இறைவி சிந்தனைக்களம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

யட்சி - யட்சன்

பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை? - பரிதி

தமிழ்த்திருமணம் - மின்னூல் & முழு ஒலித்தொகுப்பு