தற்சார்பு – 2 – பரிதி
தற்சார்பு – 2 – பரிதி
படிக்க ஆகும் நேரம் – 4.15 நிமிடங்கள்
“படைப்பின் உணவுத்தத்துவம்”
காலில் இருக்கும் சங்கிலியை உடைத்தெறிவது முதல் தேவை. நடக்கமுயல்வது இரண்டாவது வேலை. நாம் ஒன்றும் உலகின் தொடக்கத்தில் இல்லை, இடையில் இருக்கிறோம். நமது கலாச்சாரம், பண்பாடு, வாழ்வியல் முறை மாற்றப்பட்டிருக்கிறது. காலையில் கண்விழித்து, இரவு உறங்கும் வரையிலும் நமது எல்லா தேவைகளையும் வியாபாரிகளின் கைகளில் ஒப்படைத்து வைத்திருக்கிறோம். ஒரே இரவில் அதிலிருந்து விடுபடும் நிலையில் இங்கு யாரும் இல்லை. அதற்காக அங்கிருந்து விடுபடவே முடியாது என்கிற சூழலும் இங்கில்லை.
ஒரு கூட்டத்தை பயன்படுத்த தெரிந்தவன் வியாபாரியாகிறான். அதே கூட்டத்தில் பங்கேற்பவன் நுகர்வோராகிறான். ஒரு திருவிழா கூட்டத்தை எடுத்துக்கொள்ளுங்கள், அந்த கூட்டத்திலிருப்பவரின் பசியை பயன்படுத்த தெரிந்தவன் அங்கு உணவகம் வைத்திருப்பான். அதே கூட்டத்தில் வேடிக்கை பார்க்கச்சென்றவன் சாப்பிட்டுக்கொண்டிருப்பான். இதை சகல இடத்திற்கும் பொருத்திப்பார்த்துக்கொள்ளுங்கள். கல்விக்கூடங்களில் ஒரு கூட்டம் இருக்கிறது. அங்கு எழுதுகோல் தொடங்கி மடிக்கணினிவரை விற்பனை செய்ய வியாபாரிகள் இருக்கிறார்கள். எல்லா வியாபாரத்தையும் தவறு என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. ஆனால், வெறுமனே நுகர்வு கலாச்சாரத்தில் நின்று வாழும் வாழ்வை இயற்கை நமக்கு அளிக்கவில்லை என்பதில் தெளியச்சொல்லுகிறேன்.
21 நாட்கள் ஊரடங்கு என்றவுடன் நாம் முதலில் எதற்காக கலங்கினோம்? அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் போய்விடுமோ என்பதற்குத்தானே? அத்தியாவசியப் பொருட்கள் என்றால் பால், காய்கறி, அரிசி, பருப்பு தொடங்கி பல்லு குத்தும் குச்சிவரை இதுதானே? நமக்கு தெரியாமலே நாம் பசியின்வழியே நமது உயிரை இவர்களிடம் அடகுவைத்திருக்கிறோம். ஒருநாள் இந்த வியாபாரிகளெல்லாம் சேர்ந்து செயற்கையாக ஒரு தட்டுப்பாட்டை உணவுப்பொருட்களின்மீது ஏற்படுத்தி நாம் வாங்கமுடியாத அளவுக்கு தட்டுப்பாட்டை உண்டாக்கினால் என்ன செய்வீர்கள்? இது கற்பனை அல்ல. சமீபத்தில் வெங்காயத்தின்மீது ஏற்பட்ட தட்டுப்பாட்டை யோசித்துப்பாருங்கள். தட்டுப்பாட்டை சரிசெய்ய அரசு சீனாவிடமிருந்து இறக்குமதி செய்தது. மன்மோகன் சிங் அவர்களின் ஆட்சியிலும் இதே பிரச்சனை வந்தது நிச்சயம் நினைவிருக்கும். ஒரு பொருளுக்கே ஒரு நாடே அவதிப்படுகிறதென்றால் யோசித்துப்பாருங்கள்.
ஒரே மாதத்தில் மல்லிகார்ஜுனன் என்ற கர்நாடக விவசாயியை கோடீஸ்வரனாகவும் ஆக்கியது இந்த வெங்காயம். என்றால் நமது பசி ஒரு நாட்டின் பொருளாதாரத்தோடு பிணைக்கப்பட்டிருப்பதை உணருங்கள். ஆனால், நம்மைப்படைத்த இயற்கை பசியையும், உணவையும் பணத்தோடு இணைத்துப் படைக்கவில்லை. அவ்வளவு ஏன் உழைப்போடுகூட இணைத்துப் படைக்கவில்லை. கடந்த கட்டுரையில் தற்சார்பு என்பதை ஒரு தத்துவம் என்றிருந்தேன். உணவின் பின் இயற்கை வைத்திருக்கும் தத்துவத்தை உணரப்பாருங்கள்.
பெருவெடிப்புக்குப்பின் சூரியன் இருந்தது. அதிலிருந்து உலகம் வந்தது. ஓரறிவு தாவரங்கள் வளர்ந்தது. முன்பே சொல்லியிருந்தோம் உணவைப்படைக்காமல் ஒரு உயிரைப்படைக்காது இயற்கை என்று. தாவரத்திற்கான உணவான பச்சையம் சூரியனிலிருந்தே கிடைக்கிறது தாவரத்திற்கு முன்பே சூரியன் வந்துவிட்டது. அதன்பின் தாவரத்தை உண்டு வாழும் விலங்குகள். அந்த விலங்குக்கு முன்பே அதன் உணவு தாவரம் வந்துவிட்டது. கடைசியாக மனிதன் வரும் முன்பே அவனுக்கான உணவாகிய தாவரமும், ஆடு, கோழி போன்ற விலங்கும் படைக்கப்பட்டுவிட்டது.
அதையும் தாண்டி யோசித்துப்பாருங்கள் எளிமையாகச்சொல்லுகிறேன், குழந்தை பிறக்கும்வரை ஒரு தாயின் முலையில் பால் சுரப்பதில்லை. ஆனால் பெற்றெடுக்கும் குழந்தையின் முதல் உணவாக தாய்ப்பால் இருக்கிறது என்றால் படைக்கப்படும் ஒவ்வொரு உயிருக்குமான உணவையும் இயற்கை உறுதி செய்திருக்கிறது என்பதை உணருங்கள்.
ஐயா நம்மாழ்வார் இந்த தத்துவத்தைத்தான் எனக்குத்தந்தார். பாரதி இதைத்தான் “சும்மா இரு இயற்கை சோறுபோடும்” என்கிறான். சித்தன் ஏசு இதைத்தான் சொன்னதாக மத்தேயு எழுதிய சுவிசேஷத்தின் அதிகாரம் 6ன் வரி 26ல் சொல்கிறான் “ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் (இயற்கை) பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா?”
இந்த தத்துவங்களை நீங்கள் உணர்ந்தால் உங்கள் பசியை வியாபாரப் பொருளாக்கிவைத்திருக்கும் வியாபாரிகள் உங்களுக்கு இட்டிருக்கும் விலங்குகளை உடைக்கத்தொடங்கிவிடுவீர்கள்.
பேரன்புகள்..!
❤️
- இறைவி சிந்தனைக்களம்

கருத்துகள்
கருத்துரையிடுக