Disconnect (சிறுகதை) - பரிதி

Disconnect (சிறுகதை) ஒரு திருமணத்தரகரிடம் அப்பா பேசிக்கொண்டிருக்கிறார், "என் பொண்ணுக்கு ஒரு நல்ல பையனா பாருங்க தரகரே. ஒரே பொண்ணு, ரொம்ப செல்லமா வளர்த்துட்டேன். அவள கண்கலங்காம, ரொம்ப நல்லா பாத்துக்குற பையனா பாருங்க" "அதுக்கென்னங்க நல்ல பையனா, உங்க பொண்ண நல்லா பாத்துக்குற பையனாவே பாத்துடுவோம்" என்றார் தரகர். உள்ளே சமையலறையில் நின்றுகொண்டிருந்த மகிஷா அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தாள். ஒரு மாதத்திற்குமுன் பிரபுவிடம் ஏற்பட்ட சண்டை, பிரிவால் கொஞ்சம் யோசனையாகவே இருந்தாள். (அவளது அலைபேசி ஒலித்தது...) அழைப்பது தன் தோழி சத்யாவாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் வந்தது. திரையைப்பார்த்தாள் அவளேதான். அழைப்பை ஏற்று மிகுந்த சலிப்போடு "என்ன..." என்றாள். "ஏய்... பிரபு எப்பவும்போல எனக்கு கூப்பிட்டே இருக்கான்டி. உங்கிட்ட பேசனும் பேசனும்னு ரொம்ப கெஞ்சுறான்டி. இங்கபாரு மகிஷா... ஒன்னு ஏன் அவன வேண்டாம்னு சொல்றன்னு அவன்கிட்ட சொல்லு. இல்லாட்டி எங்கிட்டியாவது சொல்லு. எதுவுமே இல்லாம ஏன்டி இத்தன திமிரு பண்ற..." என்றாள் சத்யா கொஞ்சம் கோவமும் சலிப்புமாக. பதிலெதுவும் பேசாமல் அழை...